

அகமதாபாத்: குஜராத் தேர்தலை முன்னிட்டு பாஜக வெளியிட்ட விளம்பரத்தில் ராகுலை யுவராஜ் என்று குறிப்பிடுவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
டிஜிட்டல் விளம்பரங்களில் ராகுலை கிண்டல் செய்யும் வகையில் பப்பு (குழந்தை) என்ற வார்த்தையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
தேர்தல் தொடர்பான விளம்பரங்களை வெளியிடும் முன், குஜராத் தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையிலான ஊடகங்கள் குழுவிடம் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டியது அவசியம்.
அந்த வகையில் பப்பு என்று வார்த்தையைக் கொண்ட பாஜகவின் விளம்பரங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்ததோடு, அந்த வார்த்தைக்கு பதில் வேறொரு வார்த்தையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியது.
இதையடுத்து, பாஜகவின் விளம்பரத்தில் பப்பு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அதற்கு பதில் யுவராஜ் (இளவரசர்) என்ற வார்த்தையைப்போட்டு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது பாஜக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.