மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இரட்டை இலை  சின்னம் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 

அதிமுகவின் பெயர், இரட்டை இலை  சின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. 

News image
Updated On :23 நவம்பர் 2017, 9:28 am

DIN

புதுதில்லி: அதிமுகவின் பெயர், இரட்டை இலை  சின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதிமுகவில் நிகழ்ந்த இபிஎஸ் - ஒபிஎஸ் அணிகள் சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரது நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தில்லி சென்றனர். அங்கு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

அத்துடன் முடக்கப்பட்ட கட்சியின் பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதே நேரம் டிடிவி தினகரன் தரப்பும் இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு  செய்திருந்தது

அன்றே அமைச்சர்கள் தலைமையிலான அணி சென்னை திரும்பிய பின்னர் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவின் இரட்டைஇலை சின்னம் தொடர்பான விசாரணை அக்டோபர் 6-ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது.

அன்று துவங்கி ஐந்து கட்டங்களாக தேர்தல் ஆணையம் இரு தரப்பினரிடையே தொடர்ந்து விசாரணை நடத்தியது. இரு அணிகளின் தரப்பில் தனித்தனியாக எழுத்துப்பூர்வ வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேசமயம் இந்தியாவின் முக்கியமான வழக்கறிஞர்கள் இரு தரப்பிலும் ஆஜராகி வாதாடினார்கள்..

விசாரணையின் முடிவில் அதிமுகவின் பெயர், இரட்டை இலை  சின்னம், கொடி மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த உத்தரவினை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.