தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நாட்டுக்குக் கிடைத்த வள்ளல்! பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

நாட்டில் உள்ள ஏழை மக்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் மோடிதான் உண்மையான வள்ளல் என்று மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2017, 7:30 pm

DIN

நாட்டில் உள்ள ஏழை மக்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்த பாடுபட்டு வரும் பிரதமர் மோடிதான் உண்மையான வள்ளல் என்று மத்திய கலாசாரத் துறை இணையமைச்சர் மகேஷ் சர்மா பாராட்டியுள்ளார்.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதை கெளரவமாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலையான வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மகேஷ் சர்மா, பார்வையாளர்களிடையே பேசியதாவது:
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது இருக்க வேண்டும். அதாவது, அடித்தட்டு மக்களும், சாமானிய மக்களும் வாழ்வில் மேம்படுவதுதான் நிலையான வளர்ச்சியாக இருக்க முடியும்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அத்தகைய வளர்ச்சியை அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தில் உள்ள அனைத்து பலன்களையும் ஏழை-எளிய மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சேவையை பிரதமர் மோடி ஆற்றி வருகிறார்.
சொல்லப்போனால், அவர்தான் தன்னலம் கருதாத உண்மையான துறவி. மக்களுக்கு நலன்களை அள்ளித் தரும் வள்ளல். அவரது தலைமையிலான அமைச்சரவையில் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கம் வகிப்பது எனக்கு கிடைத்த கெளரவமாகவே கருதுகிறேன் என்றார் மகேஷ் சர்மா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.