அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இஸ்லாமியருடன் தேநீர் அருந்திய பெண்: 'பளார்' விட்ட பாஜக தலைவர்

இஸ்லாமியருடன் தேநீர் அருந்திய பெண்னை பாஜக தலைவர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூகவலைதளங்கில் தற்போது வைரலாகி வருகிறது.

News image
Updated On :24 செப்டம்பர் 2017, 6:55 am

DIN

YouTube video thumbnail

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரத்தில் இஸ்லாமிய வாலிபர் ஒருவருடன் ஹிந்துப் பெண் தேநீர் அருந்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த உள்ளூர் பாஜக தலைவர் சங்கீதா வர்ஷினி என்பவர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் கன்னத்தில் இருமுறை அறைந்துள்ளார்.

மேலும், ஹிந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இனியாவது வித்தியாசம் தெரிந்துகொள் என அவரை எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த இஸ்லாமிய வாலிபர், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.

இதுகுறித்து பாஜக தலைவர் சங்கீதா கூறியதாவது:

எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், ஹிந்துப் பெண்களை குறிவைத்து மதமாற்றம் செய்வதும், ஜிகாதிகளாக்குவதும் இங்கு அதிகரித்துள்ளது. எனவே அந்தப் பெண்ணை எச்சரித்தேன் என்றார்.

இந்த விவகாரத்தை பூதாகரமாக்க விரும்பவில்லை. எனவே இதனை அப்படியே விட்டுவிடுமாறு அந்தப் பெண்ணின் தகப்பனார் கூறியதாக அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.