வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

எஸ்சி, எஸ்டி பிரிவில் போதிய நீதிபதிகள் இல்லை: மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா

உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில்

Updated On :6 ஏப்ரல் 2018, 2:27 am IST

உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளாக்கப்பட வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா வலியுறுத்தினார்.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சரான உபேந்திரா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ராஷ்ட்ரீய லோக் சம்தா கட்சியின் தலைவரான உபேந்திரா, இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
எஸ்சி/எஸ்சி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் நீதிபதிகளாக உள்ளனர் என்ற பட்டியலை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும். இதை தெரிந்துகொள்ள வேண்டியது பொதுமக்களின் உரிமை. ஜனநாயகத்தின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக நீதித் துறை இருக்கலாம். ஆனால், நீதித்துறையில் ஜனநாயகம் இல்லையே. தேநீர் விற்றவர் பிரதமராக முடியும். கூலி வேலை செய்பவரின் மகன் மாவட்ட ஆட்சியர் ஆக முடியும். அப்படி இருக்கும்போது ஏழை குடும்பத்திலிருந்து நீதித் துறைக்கு வந்தவர்களில் எத்தனை பேர் நீதிபதிகளாகியுள்ளனர் என்பதை உச்ச நீதிமன்றம் தெரியப்படுத்த வேண்டும்.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் அண்மையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.