பஞ்சாப் மாநில முன்னாள் எம்எல்ஏவான செளதரி மோகன் லால் பங்கா, பாஜகவில் இருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார். மோடி தலைமையிலான அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதாக அவர் அதிருப்தி தெரிவித்தார்.
அவரோடு பஞ்சாயத்து தலைவர் பல்விந்தர் ராம், உறுப்பினர் ஜஸ்விந்தர் கெளர், மெஹ்லியானா கிராம முன்னாள் தலைவர் சுரிந்தர் சிங் ஆகியோரும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தனர். அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் மேக்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அப்போது, செளதரி மோகன் லால் பங்கா கூறியதாவது:
மோடி தலைமையிலான அரசின் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான கொள்கைகளால் அதிருப்தி அடைந்தேன். இறுதியாக, மோடி அரசுக்கு ஆதரவாக, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் பொறுமை இழந்தேன். எனவே தற்போது பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்துள்ளேன்' என்றார்.
செளதரி கட்சியில் இணைந்தது குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்கள் கூறுகையில், 'இத்தனை நாள் வாடகை வீட்டில் இருந்த செளதரி மோகன், தற்போது தனது சொந்த வீட்டுக்கு திரும்பியுள்ளார்' என்று கூறினர்.
செளதரி மோகன் கடந்த 1997 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் மாநிலம் பங்கா தொகுதியில் அகாலி தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது தந்தையும், முன்னாள் மாநில அமைச்சருமான செளதரி ஸ்வர்ன ராம், அதே காலகட்டத்தில் பக்வரா தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
பஞ்சாப் மாநில அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக இருந்த செளதரி மோகன், 2015 அக்டோபரில் சீக்கியர்களின் புனித நூல் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்தப் பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து அவர் பாஜகவில் இணைந்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


