இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் 4ஆவது நாளாக உண்ணாவிரதம்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து 4ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:38 pm

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தொடர்ந்து 4ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்துக்காக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர், தங்களது பதவியை கடந்த வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தனர். இதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள ஆந்திர பவனில் அவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர். இந்த உண்ணாவிரதம் தொடர்ந்து 4ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. இதுகுறித்து சுட்டுரையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தொடர்ந்து 4ஆவது நாளாக எங்கள் கட்சி எம்.பி.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் மேகபதி ராஜமோகன் ரெட்டி, வி. பிரசாத ராவ், ஒய்.வி. சுப்பா ரெட்டி ஆகியோர் ஏற்கெனவே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு விட்டனர்.
இந்த எம்.பி.க்களின் உயிரும், ஆந்திர மக்களின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆந்திர நலனுக்காக தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஏன் தங்களது பதவியை ராஜிநாமா செய்யவில்லை என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆந்திரத்தை சேர்ந்த 25 எம்.பி.க்களும் பதவி விலகினால், ஆந்திர விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்தப்பட மாட்டாதா? தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் பதவி விலகாமல் இருப்பதற்கு அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஏன் சாக்கு போக்குகளை சொல்லி கொண்டிருக்கிறார்? எம்.பி.க்கள் பதவி விலகுவதால் காலியாகும் தொகுதிகளுக்கு நடக்கும் இடைத் தேர்தலில், ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம் தொடர்பாக உறுதியான தீர்ப்பை அளிக்க மக்களுக்கு வாய்ப்பு கிடைக்காதா? இதையெல்லாம் தெரிந்திருந்தும், தங்கள் கட்சி எம்.பி.க்களை சந்திரபாபு நாயுடு ஏன் பதவி விலகச் சொல்லவில்லை? என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
ஆந்திரம் திரும்பும் தெலுங்கு தேசம் எம்.பி.க்கள்: இதனிடையே, ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரத்துக்காக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள், ஆந்திரத்துக்கு திரும்பி சொந்த தொகுதி மக்களிடையே இந்த விவகாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.