பெங்களூரு: விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போவது இந்து முஸ்லீம் பிரச்னைகள்தான் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தேர்தல் பிரசாரத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா சட்டப்பேரவைக்கு வரும் மே 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவைத் தீர்மானிக்கப் போவது இந்து முஸ்லீம் பிரச்னைகள்தான் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர், தேர்தல் பிரசாரத்தில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
வடக்கு கர்நாடகத்தில் அமைந்துள்ள பெலகாவி பகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் சஞ்சய் பட்டீல். இவர் தேர்தல் பிரசாரத்தில் அடையாளம் தெரியாத ஒரு இடத்தில் பேசிய விடியோவானது தற்பொழுது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் சஞ்சய் பட்டீல். நான் ஒரு இந்து. இது இந்து தேசம். நாம் ராமர் கோயிலைக் கட்டியெழுப்ப வேண்டும். யாருக்கெல்லாம் பாபர் மசூதி, திப்பு ஜெயந்தி வேண்டுமோ அவர்கள் எல்லோரும் காங்கிரஸுக்கு வாக்களிக்கட்டும். யாருக்கெல்லாம் சிவாஜி மன்னரின் ஆட்சி, ராமர் கோயில் வேண்டுமோ அவர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
நடைபெறவுள்ள கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் வெற்றியை சாலை மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தீர்மானிக்கப் போவதில்லை. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைகள் தான் முடிவு செய்யப் போகிறது.
அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆற்காட்டில் தீ விபத்து! கணவன்- மனைவி பலி!

தமிழ்ப் புத்தாண்டு: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


