உன்னோ பாலியல் பலாத்கார சம்பவம்: பாஜக எம்.எல்.ஏ.விற்கு ஆதரவான பேரணியால் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.விற்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோவில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.விற்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னோ தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவான குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த ஜூன் மாதம் 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். அந்த சிறுமி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்னதாக தீக்குளிக்க முயன்ற போதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
பின்னர் நடைபெற்ற போலீஸ் விசாரணையின் பொழுது அந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்திலேயே மர்மமான முறையில் மரணமடைந்தார். அதனை அடுத்து எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.விற்கு ஆதரவாக பேரணி நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேரணியில் பிக்காபூர், சாபிபூர், பாங்கார்மானு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எங்களுடைய எம்.எல்.ஏ. குற்றவாளி கிடையாது என கோஷம் எழுப்பி உள்ளனர். மேலும் இவ்வழக்கில் அனைத்தும் எம்.எல்.ஏ.விற்கு எதிரான சதிதிட்டமாகும் என அவர்கள் தெரிவித்தனர். இந்த மோசடியான குற்றச்சாட்டில் அவர் சிக்கவைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டத்தைப் போல உன்னோவிலும் பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு எதிராக பேரணி நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...