மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:12 am IST


ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 
இது குறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
குப்வாரா மாவட்டத்திலுள்ள லோலாப் பள்ளத்தாக்கு பகுதியில் வழக்கமான ரோந்துப்பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர் . 
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பிலால் அகமது ஷா மற்றும் ஜஹீர் அகமது என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அந்த பகுதியில் நடந்த பல பயங்கவரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள்.
முன்னதாக, அந்த வார தொடக்கத்தில் குப்வாரா பகுதியில், போலீஸாரிடம் இருந்து பறிக்கப்பட்ட இன்சாஸ் ரைபிள் துப்பாக்கி பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஏகே-47 துப்பாக்கியும் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறினார் . 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.