குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் பயிர்க் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்று கர்நாடகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் பண்டெப்பா காஷெம்பூர் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, பெங்களூரு விதானசெளதா வளாகத்தில் அவரது உருவச் சிலைக்கு திங்கள்கிழமை மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அண்மையில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரையிலான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் குமாரசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயனடைய முடியும் என்பதால் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் விவசாயக் கடனை வாங்கியிருந்தாலும், அவர்கள் அனைவரும் பயனடைய முடியும். மாநில அளவில் விவசாயிகள் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும் என்றார்.
குடகு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளை முதல்வர் குமாரசாமி கடந்த இரு நாள்களாக பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். ஆனால், சமூக வலைதளங்களில் முதல்வர் குமாரசாமி, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடாமல், செய்தித்தாளை வாசிப்பதுபோல படம் வெளியிடுவது சரியல்ல என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல் டெஸ்ட்: இமாம் உல் ஹக், ஷான் மசூத் அரைசதம்; வலுவான நிலையில் பாகிஸ்தான்!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்! எதற்கு தெரியுமா?

33 வயது நடிகை மிருணாள் தாக்குர், 24 வயது கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் டேட்டிங்?

நடிகரான இயக்குநர் - பியார் பிரேம கல்யாணம் வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET


