இதனைக் கேட்ட நீதிபதிகள்,"எதிர்ப்பு தெரிவிப்பது என்பது மக்களாட்சியின் "பாதுகாப்பு வால்வு' போன்றது. அதனை அனுமதிக்காவிட்டால், அது வெடித்து சீரழிவை ஏற்படுத்திவிடும்' என்று தெரிவித்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினரின் பாதுகாப்பில் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர். மேலும், குற்றம் நடைபெற்று 8 மாதங்கள் கழித்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.