ஐபிஎல் 2008 - 2025 ஆரஞ்ச் கேப் வெற்றியாளர்கள்..! வார்னர், கெயில், கோலி ஆதிக்கம்!
ஐபிஎல் 2008 - 2025 சீசன் வரையிலான அதிக ரன்கள் எடுத்தவர்கள் விவரங்கள்...

கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், விராட் கோலி.
படங்கள்: பிடிஐ, ஆர்சிபி.

கிறிஸ் கெயில், டேவிட் வார்னர், விராட் கோலி.
படங்கள்: பிடிஐ, ஆர்சிபி.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்களுக்கு ஒவ்வொரு சீசன் இறுதியிலும் ஆரஞ்ச் கேப் விருது வழங்கப்படுகிறது. 2008 முதல் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
பஞ்சாப் அணிக்கு விளையாடிய ஷான் மார்ஷ் 11 போட்டிகளில் 616 ரன்கள் எடுத்து முதல் ஆரஞ்ச் கேப் விருது வென்று அசத்தினார். இந்தப் போட்டிக்குப் பிறகு ஷான் மார்ஷ் மிகவும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (3) ஆரஞ்ச் கேப் வென்றவராக வரலாறு படைத்துள்ளார். சாய் சுதர்சன் இளம் வயதில் இந்த விருது வென்று அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கிறிஸ் கெயில் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆரஞ்ச் கேப் வென்று அசத்தியுள்ளார். வார்னருக்கு அடுத்த படியாக 2 முறை வென்றவர்கள் பட்டியலில் கோலி, கெயில் இருக்கிறார்கள்.
ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்தவாரக ஆர்சிபியைச் சேர்ந்த விராட் கோலி 16 போட்டிகளில் 973 ரன்கள் எடுத்து அசைக்க முடியாத நிலையில் இருக்கிறார். இதுவரை யாரும் 900 ரன்கள் கூட எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2008: ஷான் மார்ஷ் (பஞ்சாப்) - 11 போட்டிகளில் 616 ரன்கள்
2009: மேத்திவ் ஹைடன் (சிஎஸ்கே) - 12 போட்டிகளில் 572 ரன்கள்
2010: சச்சின் டெண்டுல்கர் (மும்பை) - 15 போட்டிகளில் 618 ரன்கள்
2011: கிறிஸ் கெயில் (ஆர்சிபி) - 12 போட்டிகளில் 608 ரன்கள்
2012: கிறிஸ் கெயில் (ஆர்சிபி) - 15 போட்டிகளில் 733 ரன்கள்
2013: மைக்கேல் ஹசி (சிஎஸ்கே) - 16 போட்டிகளில் 733 ரன்கள்
2014: ராபின் உத்தப்பா (கேகேஆர்) - 16 போட்டிகளில் 660 ரன்கள்
2015: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ்) - 14 போட்டிகளில் 562 ரன்கள்
2016: விராட் கோலி (ஆர்சிபி) - 16 போட்டிகளில் 973 ரன்கள்
2017: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ்) - 14 போட்டிகளில் 641 ரன்கள்
2018: கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ்) - 17 போட்டிகளில் 735 ரன்கள்
2019: டேவிட் வார்னர் (சன்ரைசர்ஸ்) - 12 போட்டிகளில் 692 ரன்கள்
2020: கே.எல். ராகுல் (பஞ்சாப்) - 14 போட்டிகளில் 670 ரன்கள்
2021: ருதுராஜ் கெயிக்வாட் (சிஎஸ்கே) - 16 போட்டிகளில் 635 ரன்கள்
2022: ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான்) - 17 போட்டிகளில் 863 ரன்கள்
2023: ஷுப்மன் கில் (குஜராத்) - 17 போட்டிகளில் 890 ரன்கள்
2024: விராட் கோலி (ஆர்சிபி) - 15 போட்டிகளில் 741 ரன்கள்
2025: சாய் சுதர்சன் (குஜராத்) - 15 போட்டிகளில் 759 ரன்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...