மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல்: வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் 

நடைபெறவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 டிசம்பர் 2018, 7:59 pm IST

ஹைதராபாத்: நடைபெறவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

119 இடங்களை கொண்ட தெலங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தேர்தலில் ஓட்டுக்காக பணம் தரும் அரசியல் கட்சிகளின் முயற்சியை தடுக்க மாநிலம் முழுவதும் வருவாய்துறை மற்றும் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை சிறப்பு அதிகாரிகள் மாநில போலீசார் துணையுடன் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.5.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
வாராங்கல் மாவட்டம் ஜன்கான் பகுதியில் உள்ள சோதனைச்சாவடி வழியாக செவ்வாய் இரவு வேகமாக வந்த ஒரு காரை மடக்கி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கோடியே 80 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி, இந்த பணத்தை கொண்டுவந்த 3 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.