அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

கேரளாவில் 4-ஆவது சர்வதேச விமான நிலையம்: கண்ணூரில் இன்று திறப்பு

கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைத்தனர். 

News image
Updated On :9 டிசம்பர் 2018, 12:51 pm


கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைத்தனர். 

கேரளாவில் கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இதையடுத்து, கண்ணூர் மாவட்டத்தில் ரூ.1800 கோடி மதிப்பிலான செலவில் கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது. முதல் விமான சேவையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் கண்ணூர் - அபுதாபி இடையிலான சேவை கொடியசைத்து துவக்கப்பட்டது.    

இதன் மூலம், இந்தியாவில் 4 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது. 

இந்த திறப்பு விழாவில், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், கண்ணூர் சர்வதேச விமான நிலையம் மேலான்மை இயக்குநர் துளசிதாஸ், அமைச்சர்கள் ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி, சந்திரசேகரன், ஷைலஜா, சசீந்திரன் மற்றும் எம்பிக்கள் ஸ்ரீமதி, ராகேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். 

இதைத்தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு ஆகியோர் உரையாற்றினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.