புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவு கூறும் விஜய் திவஸ் தினத்தை முன்னிட்டு, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர் ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971–ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16–ந்தேதி நாடு முழுவதும் ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் வெற்றியை நினைவு கூறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது
இந்த போரில் தங்கள் இன்னுயிரை இழந்த ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அமர் ஜவான் ஜோதியில், ஞாயிறன்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதேசமயம், 'வீரர்களின் அசாத்திய துணிச்சலும் தேசபக்தியும் பாகிஸ்தான் போரில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தது. வீரர்களின் சேவை எப்போதும் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும்' என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்போரூா் தொகுதியில் வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

திருப்போரூா் விசிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

வணிக / தொழில்துறை எல்பிஜி எல்பிஜி நுகா்வோா் பிஎன்ஜி இணைப்புகளைப் பெற சிஜிடி நிறுவனத்தை அணுகலாம்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


