தில்லி: மாணவர் சேர்க்கையின் போது இதையெல்லாம் கூட கேட்கிறது பள்ளி நிர்வாகங்கள்

தில்லியில் உள்ள சில பள்ளிகள் தற்போது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் சில புதிய கேள்விகளை இணைத்துள்ளன.
தில்லி: மாணவர் சேர்க்கையின் போது இதையெல்லாம் கூட கேட்கிறது பள்ளி நிர்வாகங்கள்
Updated on
1 min read


புது தில்லி: தில்லியில் உள்ள சில பள்ளிகள் தற்போது மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் சில புதிய கேள்விகளை இணைத்துள்ளன.

முதன் முதலில் அந்த விண்ணப்பங்களைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு சற்று தூக்கிவாறிப்போடலாம். சரி வாருங்கள் அப்படி என்னதான் கேட்கிறார்கள் என்று பார்க்கலாம்.

அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், பொருளாதார நிலையில் கீழ் இருக்கும் மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று தில்லி அரசு அறிவித்ததை அடுத்து, இந்த புதிய விண்ணப்பங்கள் தயாராகியுள்ளன.

அதன் அடிப்படையில், பிள்ளைகளின் பெற்றோர் அசைவமா? சைவமா? புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களா? குடிப்பழக்கம் இருக்கிறதா? குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அழைத்து வந்து, அழைத்துச் செல்வீர்கள்? என்பது போன்ற கேள்விகள் விண்ணப்பங்களில் புதிதாக முளைத்துள்ளன.

இது மிகவும் தேவையற்ற கேள்வி என்றும், சரியான முறை அல்ல என்றும் தில்லி கல்வித் துறை தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை பகிரங்கமாகவே செய்யும் தில்லி பள்ளிகள், ஒவ்வொரு கேள்விக்கும் தலா 5  மதிப்பெண்களை மாணவர்களுக்கு வழங்கி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

சில பள்ளிகள், தங்களது பள்ளி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்களை வழங்குவதையும் சட்டவிரோதம் என்று குறிப்பிடுகிறது தில்லி கல்வித் துறை.

பெற்றோர் பணியாற்றும் நிறுவனத்தின் பெயர், பான் அட்டை விவரம், ஆண்டு வருமானம் போன்ற விவரங்களை பள்ளிகள் கேட்பது தவறானது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டை கட்டாயம் என்ற பள்ளி நிர்வாகங்களின் உத்தரவுக்கு எதிராகவும் புகார்கள் எழுந்துள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com