இந்திய விமானப் போக்குவரத்து துறைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 2,300 விமானங்கள் தேவைப்படும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் விமான உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் (ஆசிய பசிபிக் மற்றும் இந்திய விற்பனை பிரிவு) மூத்த துணைத் தலைவர் தினேஷ் கேஸ்கர் கூறியதாவது:
இந்தியாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 1,940 சிறிய அளவிலான விமானங்களும், 350 பெரிய அளவிலான விமானங்களும் தேவைப்படும். இதன் மதிப்பு, ரூ. 22 லட்சம் கோடி (320 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் 10 பிராந்திய ஜெட் விமானங்களும் இந்தியாவுக்கு தேவைப்படும். இந்தியா தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும்போதிலும், இந்தியாவில் பெரும்பாலான விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் போதிய வருவாயை ஈட்டுவதில்லை.
விமான எரிபொருள் விலை, போட்டியால் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட சில காரணங்கள் விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில்
உள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானோர் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்று தினேஷ் கேஸ்கர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அப்பல்லோ மருத்துவமனை லாபம் 38.4% உயர்வு!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

கிராஸிம் இண்டஸ்ட்ரீஸ் காலாண்டு லாபம் 39% உயர்வு!

இன்னா புள்ள படமா... கோலிவுட்டில் அறிமுகமாகும் இன்ஸ்டா புகழ் பாலமுருகன்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


