உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மத்தியில் பாஜக, காங்கிரஸ் இல்லாத கூட்டணி ஆட்சி: தெலங்கானா ராஷ்டிர சமிதி வலியுறுத்தல்

மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாமல் பிராந்தியக் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாமல் பிராந்தியக் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்.பி.யும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அங்கு, காங்கிரஸ், பாஜக ஆகியவை படுதோல்வியடைந்தன. இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கவிதா கூறியதாவது:
தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலின்போது எங்கள் கட்சி பாஜகவின் பினாமி என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. தேர்தலுக்குப் பிறகு அந்தக் குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இருகட்சிகளுமே படுதோல்வியடைந்தன.
இதே நிலையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம். பாஜக, காங்கிரஸ் இல்லாமல் பிராந்தியக் கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும். அதுதான் நடுநிலையான கூட்டணியாகவும், ஆட்சியாகவும் அமையும். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இதற்கான சூழ்நிலை உருவாகும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அதன் பலத்தால் வெற்றி பெறவில்லை. அந்த மாநிலங்கள், தேசியக் கட்சிகளிடம் சிக்கிவிட்டன என்று வேண்டுமானால் கூறலாம். அங்கு பாஜகவுக்கு மாற்றாக காங்கிரஸை மட்டுமே தேர்வு செய்ய வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். அங்கு பிராந்தியக் கட்சிகள் வளர்ந்து முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை இப்போதைய மத்திய அரசு நிறைவேற்றவில்லை. எனவே, பாஜக, காங்கிரஸிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம். இதற்காக எங்கள் கட்சி தொடர்ந்து பணியாற்றும் என்றார் கவிதா.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் அந்தக் கூட்டணியில் இல்லை. அக்கூட்டணியில் உள்ள இரு பிராந்தியக் கட்சிகள், ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தேர்தலுக்கு முன்பே இவர் பிரதமராக வருவார் என்று கூறுவதும், இந்தக் கட்சிதான் ஆட்சிக்கு வரும் என்று கணிப்பதும் தவறு. ஏனெனில், அதனை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
தெலங்கானாவில் மக்கள் நலனில் கருத்தில் கொண்டு செயல்பட்ட ஒரே காரணத்தால்தான் எங்கள் கட்சி தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற முடிந்தது. மத்திய அளவிலும் அதேபோன்ற ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.