ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார்
நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து நீண்ட பேச்சு வார்தைகளுக்குப் பிறகு ராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் கடந்த வாரம் பதவியேற்றார்.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வராக காங்கிரசின் அசோக் கெலாட் புதனன்று தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்
முதலில் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தவர், பின்னர் அங்கு அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
பின்னர் தலைமைச் செயலகத்தில் தனது அறைக்குச் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மாநில தலைமைச் செயலாளர் குப்தா மற்றும் உயர் அதிகாரிகள் அருகில் இருந்தனர்.
பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அவர் முதலில் நடத்திய கூட்டத்தில் மாநில விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வா? இபிஎஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்!

கடந்த 5 நிதியாண்டுகளில் 6,255 கிளைகளை திறந்த பொதுத்துறை வங்கிகள்!

RSS கொள்கையில் அமைச்சர் நிர்மல் குமார்! திமுக MLA பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்கள்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech



