ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இந்தியாவின் நீளமான மேம்பாலங்கள்

இந்தியாவின் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியில் கட்டப்பட்டுள்ள

News image

இந்தியாவின் மிக நீண்ட சாலைப் பாலமான பூபேன் ஹசாரிகா பாலம்.

Updated On :26 டிசம்பர் 2018, 2:34 am IST


இந்தியாவின் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியில் கட்டப்பட்டுள்ள பொகீபில் பாலம் பெற்றுள்ளது. இதில் மேல் அடுக்கில் மூன்று வழிச்சாலையும், கீழ் அடுக்கில் இரு அகல ரயில் பாதைகளும் உள்ளன. இதன் தூரம் 4.94 கி.மீ. ஆகும். நமது நாட்டில் ஈரடுக்கு மேம்பாலத்தில் இதுவே நீளமானது.
சாலை மட்டுமே உள்ள இந்தியாவின் நீண்ட பாலம் அஸ்ஸாமில் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. பூபேன் ஹசாரிகா என்ற பெயரிலான இந்தப் பாலம் லோஹித் ஆற்றின் குறுக்கே 9.15 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தை பிகாரில் கங்கை நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மகாத்மா காந்தி பாலம் பிடித்துள்ளது. 1982-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 5.75 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்திலும் சாலை மட்டுமே உள்ளது.
மூன்றாவது இடத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா-வொர்லி கடல் பாலம் பிடித்துள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் 5.6 கி.மீ. தூரத்துக்கு 8 வழித்தடங்கள் உடையது.

Story image

அஸ்ஸாமின் பொகீபிலில் அமைந்துள்ள நாட்டின் மிக நீண்ட இரண்டு அடுக்குப் பாலம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.