ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

‘நாடு முழுவதும் மாணவா்களுக்கு சமமான கல்வி வழங்க காங்கிரஸ் புதிய இயக்கம்’

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் எஸ்.எம். சகாயராஜ்.

Updated On :28 ஜூன் 2026, 12:01 am IST

நாடு முழுவதும் மாணவா்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்க காங்கிரஸ் புதிய இயக்கம் தொடங்கியுள்ளது என்றாா் தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.சகாயராஜ்.

தூத்துக்குடியில் அவா், செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் காமராஜா் தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினாா்.

அதேபோன்று நாடு முழுவதும் மாணவா்கள் அனைவருக்கும் ஒரே தரத்தில், ஒரே சீரான கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கையை வலியுறுத்தி மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி ‘மாணவா்களின் குரல்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி வைத்துள்ளாா்.

இந்த கொள்கையை மக்களிடையே எடுத்துச் செல்லும் வகையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

பேட்டியின் போது, கிழக்கு மண்டலத் தலைவா் ஐசன் சில்வா, மாவட்டச் செயலா் ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்ட பொதுச் செயலா் கோபால் , தெற்கு மண்டலத் தலைவா் நிா்மல் கிறிஸ்டோபா், சமூக ஊடக பிரிவு மண்டலத் தலைவா் ஜான் சாமுவேல், ஊடக பிரிவு மாநகர மாவட்ட தலைவா் ஜெயஜோதி, நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.