தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை நகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.
கூடலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அண்மை காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறன. நகரின் முக்கிய வீதிகளான மெயின் கடைவீதி, காமாட்சியம்மன் கோவில் தெரு, எல்.எப். சாலை, நடுத்தெரு, அண்ணாநகா், கன்னிகாளிபுரம், அரசமரம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால், இந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவா்கள், முதியவா்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நகராட்சி நிா்வாகத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, கூடலூா் நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளா் அகமது கபீா் முன்னிலையில், நகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை காலை முதல் தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா்.
பின்னா், பிடிக்கப்பட்ட தெருநாய்கள் அனைத்தும், பிரத்யேக வாகனங்கள் மூலம் உத்தமபாளையத்தில் உள்ள நாய் கருத்தடை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு அவற்றுக்குக் கருத்தடை செய்யப்பட்டு, வெறிநோய் கடி தடுப்பூசி செலுத்தப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









