மேகாலயா சுரங்க விபத்து: 2 வாரங்களுக்குப் பிறகு அதிக அழுத்தம் கொண்ட பம்புகள் விரைந்தன

மேகாலயாவில் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான அதிக அழுத்தம் கொண்ட பம்புகளும், ஒடிசாவைச் சேர்ந்த 20 தீயணைப்புப் படை வீரர்களுடன் இந்திய விமானப் படையின் விமானம் விரைந்துள்ளது.
மேகாலயா சுரங்க விபத்து: 2 வாரங்களுக்குப் பிறகு அதிக அழுத்தம் கொண்ட பம்புகள் விரைந்தன
Updated on
1 min read


புவனேஷ்வர்: மேகாலயாவில் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பதற்குத் தேவையான அதிக அழுத்தம் கொண்ட பம்புகளும், ஒடிசாவைச் சேர்ந்த 20 தீயணைப்புப் படை வீரர்களுடன் இந்திய விமானப் படையின் விமானம் விரைந்துள்ளது.

மேகாலயாவில் சுரங்க விபத்து நேரிட்டு 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கி 2 வார காலத்துக்கும் மேல் ஆன நிலையில், இன்று ஒடிசாவில் இருந்து சிறப்பு தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிக்காக விரைந்துள்ளனர்.

இவர்கள் மிக அதிக அழுத்தம் கொண்ட பம்புகளை உடன் கொண்டு சென்றிருப்பதால், உடனடியாக சுரங்க வாயிலை மூடியுள்ள நீரை வெளியேற்றி மீட்புப் பணியை துரிதப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பேரிடர் மீட்புப் படை உட்பட பல்வேறு படை வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு நடத்திய பல்வேறு முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com