வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்த பாரதிய ஜனதா எம்.பி! 

கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்த பாரதிய ஜனதா எம்.பிக்கு பொதுமக்களின் பாராட்டுகள் குவிகின்றது.
வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்த பாரதிய ஜனதா எம்.பி! 
Published on
Updated on
1 min read

போபால்: கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது, வெறும் கைகளால் பள்ளிக்கழிவறையை சுத்தம் செய்த பாரதிய ஜனதா எம்.பிக்கு பொதுமக்களின் பாராட்டுகள் குவிகின்றது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா தொகுதியின் எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா. இவர் தனது தொகுதிக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது காஜூஹா என்ற கிராமத்தில் தூய்மைப் பணியில் தொண்டர்களுடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது கிராம தொடக்கப் பள்ளிக்கு சென்ற ஜனார்தன் மிஸ்ரா, அங்கு நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த கழிவறைக்கு சென்றார். கழிவறை கோப்பையில் பயப்படுத்தப்படாத காரணத்தினால் அது சேறும் சகதியும் நிரம்பி காணப்பட்டது.

சற்றும் யோசிக்காத ஜனார்தன் மிஸ்ரா உடனடியாக தூய்மைப்பணியில் இறங்கினார். அங்கு இருந்த சேற்றை வெறும் கைகளால் அள்ளி சுத்தம் செய்தார். அவர் கழிவறையை சுத்தம் செய்த விடியோ காட்சி சமுக வலைத்தளங்களால் வைரலாகப் பரவியது 

ஜனார்தன் மிஸ்ராவின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மிஸ்ரா ஏற்கனவே தனது தொகுதியில் சாலைகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் கழிவுவரை சுத்தம் செய்த பொழுது மிஸ்ரா தகுந்த உபகரணங்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com