மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விடியோ காலில் காதலன் கண் முன்னே காதலி தூக்கிட்டு தற்கொலை! 

ஆந்திர மாநிலம் ஹைதாராபாத்தில் காதலனுடன் விடியோ கால் பேசிக்கொண்டே காதலி  தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2018, 11:34 am

DIN

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஹைதாராபாத்தில் காதலனுடன் விடியோ கால் பேசிக்கொண்டே காதலி  தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர  மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹனிஷா சவுத்ரி (24). இவர் ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ இரண்டாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த அவர் தக்ஷித் படேல் என்ற இளைஞரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன்னர் தக்ஷிதுக்கு தனது செல்போனிலிருந்து ஹனிஷா வீடியோ கால் செய்துள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சேர்ந்து செல்வது குறித்து உருவான உரையாடலானது, இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதமாக மாறியுள்ளது.

தக்ஷித்தின் பேசினால் கோபமடைந்த ஹனிஷா, தான் தற்கொலை செய்யப் போவதாகக் கூறியுள்ளார். அத்துடன் விடியோ காலிலேயே தூக்குப்  போடுவதற்கான முயற்சியிலிறங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தக்ஷித், உடனடியாக ஹனிஷா தங்கியுள்ள விடுதிக்கு விரைந்துள்ளனர்.

அறைக் கதவை உடைத்து திறந்து பார்த்தால் ஹனிஷா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொழுதும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவ இடத்தில்  ஹனிஷாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.