அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது பாலியல் புகார்: அருணாசல் முதல்வர்

'அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது' என்று அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது பாலியல் புகார்: அருணாசல் முதல்வர்
Updated on
1 min read

'அரசியல் உள்நோக்கத்துடன் எனக்கு எதிராக பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது' என்று அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு குற்றம் சாட்டியுள்ளார்.
பெண் ஒருவர், தன்னை பெமா காண்டு கடந்த 2008-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தேசிய மகளிர் ஆணையத்தில் கடந்த 15-ஆம் தேதி புகார் கொடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் பெமா காண்டு வியாழக்கிழமை கூறுகையில், ''எனக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் உண்மை நிலையை தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்யும்'' என்றார்.
முன்னதாக, அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எனக்கு எதிராக அரசியல் எதிரிகளால் திட்டமிடப்பட்டு, உள்நோக்கத்துடன் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு எதிரான புகார்கள், அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்துள்ளன. நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. தேசிய மகளிர் ஆணையம் எனக்கு நீதி வழங்கும். எனக்கு எதிரான நயவஞ்சக சதித் திட்டத்தை முறியடித்து உண்மை வெளியே வரும்.
ஏற்கெனவே எனக்கு எதிராக இரு முறை பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்தப் புகார்களை நீதிமன்றங்கள் நிராகரித்து விட்டன.
மாநிலத்தில் ஊழலை ஒழிப்பதற்காக நான் மேற்கொள்ளும் கடுமையான நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறேன். இதைச் சீர்குலைக்கும் விதமாகவே எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்படுகிறது என்று முதல்வர் பெமா காண்டு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com