மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் ரூ.11400 கோடி மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது கடந்த 14-ஆம் தேதி கண்டறியப்பட்டது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக சி.பி.ஐ.யிடமும் புகார் அளிக்கப்பட்டது.
சிபிஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் நிரவ் மோடியின் நிறுவன அலுவலர்கள் மூவரையும் கைது செய்துள்ளது. ஆனால் ஜனவரி மாத துவக்கத்திலேயே நிரவ் மோடி வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பி ஓடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இந்திய விசாரணை முகமைகள் மூலம் நிரவ் மோடியை இந்தியா அழைத்து வரும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு குறித்து சிறப்பு புலனய்வு குழு (எஸ்.ஐ.டி) அமைத்து விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மேலும் ரூ.1323 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தற்பொழுது தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாம்பே பங்கு வர்த்தக நிறுவனத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் திங்களன்று இரவு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இத்தனையும் சேர்த்து நிரவ் மோடி மொத்தமாக ரூ. 12723 கோடி பணத்தினை பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து மோசடி செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இதன் எதிரொலியாக பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகளின் விலையானது தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்

ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்!

மக்களவையில் சுரங்க மசோதா விவாதமின்றி நிறைவேற்றம் - கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் வரி விதிக்க கட்டுப்பாடு

தென்காசி மாவட்டத்தில் அடிப்படை வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரிக்கை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



