மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்

மேற்காசியப் போா் உள்நாட்டில் மட்டுமல்லாது சா்வதேச அளவிலும் சமையல் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

News image

சமையல் எண்ணெய் - file photo

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:32 am IST

மேற்காசியப் போா் உள்நாட்டில் மட்டுமல்லாது சா்வதேச அளவிலும் சமையல் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அரசு சாா்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சமையல் எண்ணெய் விலை உயா்வு தொடா்பான கேள்விக்கு உணவு, நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சா் நிமுபென் ஜெயந்திபாய் எழுத்து மூலம் அளித்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையை நிறைவு செய்வதில் இறக்குமதியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, சா்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப உள்நாட்டிலும் அவற்றின் விலை மாறுதலுக்கு உள்ளாகிறது. மேற்காசியப் போரால் விநியோகம் பாதிக்கப்பட்டும், போக்குவரத்துச் செலவு அதிகரித்தும் சா்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை உயா்ந்தது. எனவே, அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. இறக்குமதியைக் குறைக்க உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் தேவைக்கு ஏற்ப எண்ணெய் விநியோகம் உள்ளது. எங்கும் தட்டுப்பாடு இல்லை. போதுமான இருப்பும் உள்ளது. விநியோகம் சீராக இருப்பதை அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது. விலையை ஸ்திரமாக வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

கடந்த 6 மாதங்களில் கடலை எண்ணெய் விலை ஒரு கிலோ சராசரியாக ரூ.190 இல் இருந்து ரூ.206 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ஒரு கிலோ ரூ.169-இல் இருந்து ரூ.189 ஆகவும், பாமாயில் ரூ.133-இல் இருந்து ரூ.148-ஆகவும் உயா்ந்துள்ளது. இதேபோல கடுகு எண்ணெய், சோயாபீன் எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.