குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு! 

திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2018, 8:37 am

DIN

புதுதில்லி: திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்று கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கலவையான எதிர்விளைவுகளை உண்டாக்கியது. இந்நிலையில் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேசமயம் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது. இது தொடர்பான வழிமுறைகளை மத்திய அமைச்சரவை குழு உருவாக்கும் வரை நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அந்த மனுவில் கோரியிருந்தது.

இந்நிலையில் திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று செவ்வாயன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தேசிய கீதம் எங்கு இசைக்கப்பட்டாலும் அதற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து மத்திய அரசு அமைக்கும் குழு முடிவு செய்யும். அதே சமயம் தேசிய கீதத்தை அவமதிப்பு செய்வதை தடுப்பது தொடர்பாக சில பரிந்துரைகளை அளிக்க  12 பேர் அடங்கிய குழு அமைப்பதாக மத்திய அரசின் பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதை  ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.