ஏப்ரல் 1-ந் தேதி முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்: நிதின் கட்கரி அறிவிப்பு

பொது போக்குவரத்து முறை வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் கருவிகள் கட்டயாம் பொருத்தப்பட வேண்டும்.
ஏப்ரல் 1-ந் தேதி முதல் பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கட்டாயம்: நிதின் கட்கரி அறிவிப்பு

ஏப்ரல் 1-ந் தேதி முதல் அனைத்து பொது வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள பொது வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்துவது வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை மத்திய சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 1, 2018 முதல் டாக்ஸி, பேருந்துகள், தனியார் வாடகை வாகனங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து முறை வாகனங்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் மற்றும் தற்காப்பு காரணமாக சப்தம் எழுப்பக்கூடிய பேனிக் பட்டன் எனப்படும் கருவிகள் கட்டயாம் பொருத்தப்பட வேண்டும்.

இவற்றில் இருந்து மூன்று சக்கர வாகனங்களான ஆட்டோக்கள் மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய இ-ரிக்ஷாக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com