திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள்: ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்காக ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து

News image
Updated On :9 ஜூலை 2018, 7:48 pm

DIN

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டத்துக்காக ரூ.2,500 கோடி கடன் வாங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கப் பெறாத நிலையில், இந்த முடிவை ரயில்வே எடுத்துள்ளது.
முன்னதாக, ரயில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 5,121 ரயில் நிலையங்களிலும், 58,276 ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் 2018-19ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.3,000 கோடியாகும். இதில், நிர்பயா நிதியின்கீழ் ரூ.500 கோடியை மத்திய நிதியமைச்சகம் ஏற்கெனவே வழங்கியுள்ளது. 
இதுதொடர்பாக ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அரசு வழங்கிய நிதியின்கீழ் இதுவரை 436 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 547 ரயில் நிலையங்களில் இந்த ஆண்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். இத்திட்டத்துக்கு தேவைப்படும் மீதமுள்ள தொகையை சொந்த நிதி ஆதாரங்களின் மூலம் திரட்டிக் கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகத்திடம் நிதியமைச்சகம் தெரிவித்துவிட்டது. இதனால், ரயில்வேயின் நிதிப் பிரிவான ரயில்வே நிதி ஆணையத்தின் (ஐஆர்எஃப்சி) மூலம் ரூ.2,500 கோடி கடன் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் முதல்கட்டமாகவும், இதர வகுப்பு பெட்டிகளில் அடுத்தகட்டமாகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ஒரு பெட்டியில் 8 கேமராக்கள் என்ற வீதத்தில் பொருத்தப்படும். இத்திட்டத்துக்காக, புறநகர் ரயில்களில் 10,349 பெட்டிகள், ராஜதானி, சதாப்தி போன்ற சொகுசு ரயில்களில் 4,038 பெட்டிகள், அதிவிரைவு, விரைவு ரயில்களில் 27,000 பெட்டிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இத்திட்டப் பணிகள் நிறைவடையும் என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.