மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

'ஆசியாவின் நோபல்' எனப்படும் மகசேசே விருதுக்கு இந்தியர்கள் இருவர் தேர்வு 

'ஆசியாவின் நோபல்' என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இந்த ஆண்டு இந்தியர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News image
Updated On :26 ஜூலை 2018, 6:50 pm IST

புது தில்லி: 'ஆசியாவின் நோபல்' என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இந்த ஆண்டு இந்தியர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய கண்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு என பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பாக ராமன் மகசேசே விருது வழங்கப்படுகிறது.இந்த விருதின் சிறப்புத் தன்மை கருதி இது 'ஆசியாவின் நோபல்' என்று புகழப்படுகிறது.

இவ்வாண்டு இந்த விருதுக்கு என மொத்தம் ஆறு பேர் தேர்வு செய்து வியாழனன்று அறிவிக்கப்பட்டுளார்கள். அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் பரத் வத்வானி மற்றும் பொறியாளர் சோனம் வாங்சுக் இருவரும் அடங்குவார்கள்.

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டு ஏறக்குறைய கைவிடப்பட்ட நிலையிலிருப்பவர்களின் நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருவதன் காரணமாக பரத் வத்வானிக்கும், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருப்பவர்களின் சமுக முன்னேற்றத்துக்காக புதிய வழிகளில் பயிற்றுவித்தல் முறைகளை கையாண்டதற்காக சோனம் வாங்சுக்குக்கும் வழங்கப்படுவதாக விருதுத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.