அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

பாஜகவின் நிரந்தர கூட்டணிக் கட்சி சிரோமணி அகாலி தளம்: சுக்பீர் சிங்

பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிரந்தர கூட்டணிக் கட்சியாக சிரோமணி அகாலி தளம் இருக்கும் என்று அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறினார்.

News image

பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்ட சிரோமணி அகாலி தள கட்சித் தலைவர்களுடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா.

Updated On :8 ஜூன் 2018, 1:10 am IST

பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிரந்தர கூட்டணிக் கட்சியாக சிரோமணி அகாலி தளம் இருக்கும் என்று அக்கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கூறினார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, சிரோமணி அகாலி தளக் கட்சித் தலைவர்களை சண்டீகரில் வியாழக்கிழமை சந்தித்தார். 
அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலுக்கான நேரம் நெருங்கிவிட்டது. எதிர்க்கட்சிகளை வீழ்த்த, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து அமித்ஷாவுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. சிரோமணி அகாலி தளம்-பாஜக இடையே எந்தவித பிளவும் இல்லை. 
உள்கட்சி கமிட்டி அமைக்கப்பட்டு பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்காக ஆதரவு திரட்டி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பல்வேறு தரப்பினரை சந்தித்து வருகிறார். மும்பையில் புதன்கிழமை சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த அவர், பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் சிரோமணி அகாலி தளத் தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்தார்.
அப்போது, சிரோமணி அகாலி தளக் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், அதன் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் சிரோமணி அகாலி தளம் சார்பில் சுக்தேவ் சிங் தின்ட்சா, பல்வீந்தர் சிங் புந்தர், ரஞ்ஜித் சிங் பிரம்புரா ஆகிய எம்.பி.க்களும், தல்ஜீத் சிங் சீமா, விக்ரம் சிங் மஜிதியா ஆகியோரும் கலந்துகொண்டனர். பாஜக சார்பில் மதன் மோகன் மிட்டல், மனோரஞ்சன் காலியா, அஷ்வினி சர்மா, ராஜிந்தர் பண்டாரி ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து அமித் ஷா தனது சுட்டுரையில், சண்டீகரில் சுக்பீர் சிங் பாதலின் இல்லத்தில் அவரையும், பிரகாஷ் சிங் பாதலையும் சந்தித்தேன். இச்சந்திப்பு திருப்திகரமாக இருந்தது' என்று பதிவிட்டார். இச்சந்திப்புக்குப் பிறகு அமித் ஷா, பஞ்சாப் பாஜக தலைவர்களுடன் மக்களவைத் தேர்தல் வியூகம் குறித்து கலந்தாலோசித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.