கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு தானாகவே கவிழும் என்று அந்த மாநில பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, பாஜக ஒருபோதும் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க நினைக்காது. ஆனால், அக் கூட்டணி அரசு தானாகவே கவிழும்.
அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் இரு கட்சியினரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், இரு கட்சிகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்வதிலே நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கியுள்ளன.
ஜூன் 29-ஆம் தேதி பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் பாஜக அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் ஆர்வமாக உள்ளனர். சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரைத் தேர்வு செய்வது என செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழுத்தாளர் பூமணி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

உண்ணாவிரதத்தைக் கைவிடுவாரா சோனம் வாங்சுக்? மிகுந்த வலியால் அவதி!

இறுதிச் சடங்குகளில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் : மஞ்சு வாரியர்

ரயிலில் தாலி திருட்டு! பயணிக்கு ரூ. 80,000 நஷ்டஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவு!
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



