உலகில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வெளியான ஆய்வறிக்கைக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், சிரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாக கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த தாம்ஸன் ராய்ட்டர்ஸ்' நிறுவனம், மகளிர் பிரச்னைகளை கையாளும் 550 நிபுணர்களிடம் ஆய்வு நடத்தியதன் அடிப்படையில், பெண் பாதுகாப்பில் மிகவும் மோசமான நாடாக இந்தியா இருக்கிறது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தொடர்பாக சசி தரூர் பேசியதாவது:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான மோசமான சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றன. இதற்காக ஒவ்வொரு இந்தியரும், குறிப்பாக ஆண்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பெண்கள் பாதுகாப்பில் உலகிலேயே மிகவும் மோசமான நாடு இந்தியா என்பதை ஜீரணிக்க இயலவில்லை.
பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக, பாலின சமத்துவம், பெண்களுக்கான கல்வி, காவல்துறையினரின் ரோந்துப் பணிகளை அதிகரிப்பது, காவல் துறையில் கூடுதல் பெண்களை சேர்ப்பது ஆகியவை தொடர்பாக ஏராளமானோர் குரல் கொடுக்கின்றனர்.
தற்போது வரை, பெண்களுக்கு குறிப்பிடத்தக்க சுதந்திரம் கிடைப்பது இந்தியாவில்தான். ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் பெண்கள் சுதந்திரமாக உலவுவதற்கும், வேலை செய்வதற்கும், இதர நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதைப் போல இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை.
சிரியா போன்ற நாடுகளில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளைப் போல இந்திய பெண்கள் எதிர்கொள்வதில்லை. சிரியா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இதர நாடுகளைக் காட்டிலும் இந்தியா பின்தங்கியிருப்பதாக கூறப்பட்டதைக் கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
ஒரு செய்தியின் தலைப்பைக் கொண்டு குழப்பிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க நாம் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே முக்கியமானது.
குறிப்பிட்ட அந்த ஆய்வறிக்கையை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, இல்லையா என்பது முக்கியமல்ல. பெண்களுக்கு எதிரான சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
பல வழிகளில் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை உணருகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அரசும், சமூகமும் எடுத்தாக வேண்டும். அதில் நான் உடன்படுகிறேன். வெறும் தலைப்பு குறித்து மட்டும் நான் பேசிக் கொண்டிருக்க விரும்பவில்லை என்றார் தரூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறையல்ல..! மோடி அரசு பின்வாங்கிய முக்கிய நிகழ்வுகள்!

10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்! 4 மணி நேரத்தில் விநியோகம்!

26.7.1976: தி.மு.க. அரசு மீதுள்ள புகார்கள் குறித்து விரைவில் கிரிமினல் வழக்கு வரும்

போதையில்லா தமிழகம் உருவாக்க விழிப்புணா்வு நடைப்பயணம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



