நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் பொருளாதாரம் வளரும்

'நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் பொருளாதாரம் வளரும்; எனவே, பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாடுகளும், ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஒன்றாக
நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் பொருளாதாரம் வளரும்
Updated on
1 min read

'நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் பொருளாதாரம் வளரும்; எனவே, பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாடுகளும், ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஒன்றாக முன்னெடுக்கப்பட வேண்டும்' என்று ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:
நாட்டின் எல்லைப் பாதுகாப்பும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.
இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன; அங்கு உள்நாட்டுப் பாதுகாப்பு சூழலும் சிறப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், முதலீடுகளைக் கவர முடியும். இதனைக் கருத்தில் கொண்டுதான், பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கான செயல்பாடுகளும், ராணுவத்தை நவீனப் படுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஒன்றாக முன்னெடுக்கப்பட வேண்டும். நாடு பாதுகாப்பாக இருந்தால்தான், பொருளாதாரம் வளரும். நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் சாலைகள் அமைத்தல், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதன் மூலம் அப்பகுதி மக்கள் பயனடைவர். தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதில் ராணுவம் முக்கிய பங்காற்றுகிறது.
ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் ரூ.4 லட்சம் கோடி செலவில் முக்கிய தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான 136 திட்டங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றார் விபின் ராவத்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com