மேகாலயத்தில் மறுதேர்தல்: 86 சதவீத வாக்குப்பதிவு

மேகாலய மாநிலம், ரலியாங் பேரவைத் தொகுதியில் அடங்கிய ஒரு வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மறுதேர்தல் நடைபெற்றது. அதில் 86 சதவீத வாக்குகள் பதிவாகின.
Updated on
1 min read

மேகாலய மாநிலம், ரலியாங் பேரவைத் தொகுதியில் அடங்கிய ஒரு வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மறுதேர்தல் நடைபெற்றது. அதில் 86 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேகாலய சட்டப் பேரவைக்கு கடந்த 27-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 59 தொகுதிகளில் நடைபெற்ற இத்தேர்தலில் 84 சதவீத வாக்குகள் பதிவாகின.
எனினும், ரலியாங் தொகுதியில் அடங்கிய ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. அந்த வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை மறுவாக்குப் பதிவு நடைபெற்றது. 
இதில், மொத்தமுள்ள 628 வாக்காளர்களில் 544 பேர் (86 சதவீதம்) வாக்களித்ததாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கார்கோங்கார் தெரிவித்தார்.
நாகாலாந்தில் இன்று மறுவாக்குப்பதிவு: நாகாலாந்திலும் கடந்த 17-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதில், 9 தொகுதிகளில் அடங்கிய 11 வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைப்பற்றுதல் என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 11 வாக்குச் சாவடிகளிலும் வெள்ளிக்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அபிஜித் சின்ஹா. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com