ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கமான கோடை காலமாக இருக்காது

இந்திய மாநிலங்களில் வழக்கமான கோடை காலத்தில் இருக்கும் வெயில் அளவை விட இந்த ஆண்டு 1 டிகிரியைவிட அதிக வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2018, 7:13 am

DIN


புது தில்லி: இந்திய மாநிலங்களில் வழக்கமான கோடை காலத்தில் இருக்கும் வெயில் அளவை விட இந்த ஆண்டு 1 டிகிரியைவிட அதிக வெப்பம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் வழக்கமாக நிலவும் வெப்ப அளவை விட 1 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் நிலவும் என்று கூறப்பட்டுள்ளது. 

வழக்கமான அளவை விட அதிகபட்சமாக 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், மலைப் பகுதி மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வழக்கமான அளவை விட 3 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கலாம்.

அதே போல, மார்ச் மாதம் முதல் தென்னிந்திய மாநிலங்களிலும், நான்கு வடகிழக்கு மாநிலங்களிலும் வெப்ப நிலை படிப்படியாக உயரும்.

இந்தியாவில் வழக்கமாக மார்ச் முதல் ஜூலை மாதம் வரை கடுமையான வெப்பமும், வெப்பக் காற்றும் வீசுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.