ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பணமதிப்பிழப்பு எல்லாம் நமக்குத்தான்: 2017 உலகப் பணக்காரர்கள் பட்டியல் பற்றிய சுவாரசிய தகவல்

பணமதிப்பிழப்பினால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், 2017ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 20 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 12:02 pm

DIN


பணமதிப்பிழப்பினால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டாலும், 2017ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 20 இடங்களுக்குள் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார்.

மேலும், 2017ம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 56 புதிய கோடீஸ்வரர்களின் பெயர்களோடு சேர்த்து மொத்தம் 170 இந்திய பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

ஹரன் குளோபல் ரிச் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த 819 கோடீஸ்வரர்கள் இடம்பெற்றுள்ளனர். இது இந்தியாவை விட 5 மடங்கு அதிகம். பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மொத்த பணக்காரர்களில் 3ல் ஒரு பங்கு கோடீஸ்வரர்கள் பழையவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிதாக இணைந்தவர்களாக உள்ளனர்.

பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுங்கத் துறை, பிரமோட்டர்ஸ், வியாபாரங்கள் பலவும் முடங்கியதால், பல தொழிலதிபர்கள் நஷ்டமடைந்து, புதிய தொழில் நிறுவனங்கள் லாபத்துடன் இயங்கியதால் அவர்கள் முந்தையவர்களை பின்னுக்குத் தள்ளி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அதிகப் பணக்காரர்களை மட்டும் அல்லாமல், பெண் கோடீஸ்வரர்களையும் அதிகளவில் கொண்ட நாடாக சீனா முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனாவைச் சேர்ந்த 163 பெண் கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவின் தரப்பில் சாவித்ரி ஜிண்டால் உள்பட 14 பெண்கள் மட்டுமே இடம்பிடித்தனர்.

உலகிலேயே கோடீஸ்வர்களை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 

இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 19வது இடத்திலும் முகேஷ் அம்பானி இடம்பெற்றுள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் லஷ்மி மிட்டல் இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும், உலக அளவில் 65வது இடத்திலும், திலிப் ஷாங்வி இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும், உலக அளவில் 87வது இடத்திலும் உள்ளனர்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 68 நாடுகளைச் சேர்ந்த  2,694 கோடீஸ்வரர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.