புதுதில்லி: அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டப்படும் பொழுது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வலியுறுத்துவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளார்.
காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28-ந்தேதி காலையில் மூச்சுத் திணறலால் மரணமடைந்தார். இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டப்படும் பொழுது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வலியுறுத்துவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டப்படும் பொழுது, அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வலியுறுத்துவேன். ராமஜென்ம பூமி விவகாரத்தில் அவருடைய பங்கை நினைவு கூறம் வகையில் அது அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு! தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? இயக்குநரகம் முழு விளக்கம்!

கரப்பான்பூச்சிகளால் ஸ்தம்பிக்கும் தில்லி... இன்றைய நேரலை (ஜூலை 22)

சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு!







