லெனின், அம்பேத்கரைத் தொடர்ந்து மகாத்மா காந்தி சிலை சேதம்: கேரளாவில் விஷமிகள் கைவரிசை! 

லெனின், அம்பேத்கர் சிலைகளைத் தொடர்ந்து கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தி சிலை விஷமிகளால் சேதபடுத்தப்பட்டுள்ளது.
லெனின், அம்பேத்கரைத் தொடர்ந்து மகாத்மா காந்தி சிலை சேதம்: கேரளாவில் விஷமிகள் கைவரிசை! 

கன்னூர்: லெனின், அம்பேத்கர் சிலைகளைத் தொடர்ந்து கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தி சிலை விஷமிகளால் சேதபடுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 25 ஆண்டு காலமாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வந்த இடதுசாரிகளின் கைவசம் இருந்த ஆட்சியை பாஜக கைப்பற்றியது.

உடனடியாக அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான லெனின் அவர்களின்  இரண்டு சிலைகள் அகற்றப்பட்டன. இது அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்த பெரியார் சிலை பாஜக கட்சியைச் சேர்ந்தவர்களால் செவ்வாய் அன்று இரவு சேதப்படுத்தப்பட்டது.

அதேபோல கொல்கத்தாவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாஜகவின் ஆதார அமைப்பான ஜனசங்க நிறுவனர் ஸ்யாமா பிரசாத் முகர்ஜியின் சிலை புதனன்று அதிகாலை சேதப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று புதன் மாலை உடைக்கப்பட்டது அங்கு பதற்றத்தை உண்டாகியுள்ளது.

நாடு முழுவதும் தொடர்ச்சியாக சிலைகள் உடைக்கப்படும் சம்பவத்துக்கு பிரதமர் மோடி தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில அரசுகள் சிலைகள் அவமதிக்கும் சம்பவம் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் எனவும், இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் லெனின், அம்பேத்கர் சிலைகளைத் தொடர்ந்து கேரள மாநிலம் கன்னூரில் மகாத்மா காந்தி சிலை விஷமிகளால் சேதபடுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலிபரம்பா பகுதியில் மகாத்மா காந்தியின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. வியாழன் அன்று அதிகாலை அந்த சிலையின் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் சிலை சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து சிலையை சேதப்படுத்திய விஷமிகளைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com