கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வரும் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பத்தாம் வகுப்புக்குப் பிறகு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், தங்களது கல்வியைத் தொடர்வதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைப் பயன்படுத்தி சில கல்வி நிறுவனங்கள் முறைகேடு செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன. அவற்றைத் தடுப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த துறைக்கான அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சில கல்வி நிறுவனங்கள், போலியாக மாணவர் சேர்க்கை நடத்தி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெற்று, அதிக அளவு பணத்தை ஊழல் செய்வதாகப் புகார்கள் வந்துள்ளன.
சில கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை அரசிடம் இருந்து பெற்றுக் கொண்ட பிறகு, அவர்களுக்கு நல்ல முறையில் கற்பிப்பதில்லை என்றும் புகார்கள் வந்துள்ளன. இதனால், இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தோல்வியடையும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக, பல்வேறு பதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
அதன்படி, இதுவரை கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு வந்த உதவித்தொகை, இனி, மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும். இதனால், மாணவர்களால் உரிய நேரத்தில் தாமதமின்றி கல்விக் கட்டணத்தை செலுத்த முடியும்.
மேலும், கல்வி உதவித்தொகை மாணவர்களில் குறைந்தது 50 சதவீதம் பேரையாவது கல்வி நிறுவனங்கள் தேர்ச்சி பெறச் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால், அந்த கல்வி நிறுவனங்களின் தரத்தை குறைக்கும் விதமாக, அவற்றின் பெயர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என்று அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

பாட்ஷா பட இயக்குநரின் சாருகேசி படத்தில் ரம்யா பாண்டியன்!

விஜய் அதிமுக, பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறாா்: திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐபிஎல்: கொல்கத்தா கேப்டன் ரஹானேவுக்கு அபராதம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

