மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் பண்டாரு வைஷ்ணவ் மரணம் அடைந்தார்.

News image
Updated On :23 மே 2018, 10:51 am


முன்னாள் மத்திய இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் பண்டாரு வைஷ்ணவ் மரணம் அடைந்தார்.

பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன், பண்டாரு வைஷ்ணவ் எம்பிபிஎஸ் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் உள்ளது வீட்டில், நேற்று தனது குடும்பத்தினருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவர் அருகில் உள்ள குருநானகா கேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் இரவு 12.30 மணிக்கு உயிரிழந்தார். 

பண்டாரு வைஷ்ணவ் கடுமையான மாரடைப்பால் மரணம் அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.