சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துவிட்டன: மத்திய அரசு

ரமலான் மாதத்தை முன்னிட்டு ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்ட பிறகு, காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 6:38 pm IST

ரமலான் மாதத்தை முன்னிட்டு ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்ட பிறகு, காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் குறைந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. இதில் நோன்பு மேற்கொள்பவர்களுக்கு அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தித் தரும் நோக்கில், காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. எனினும், இதனைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் அசம்பாவிதத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்ட பிறகு கடந்த 8 நாள்களில் 16 கல்வீச்சு சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. இதில் ஸ்ரீநகரில் 7 கல்வீச்சுகளும், அனந்த்நாக்கில் 3, பத்காமில் 2, சோஃபியானில் 2, பந்திபோரா, பாராமுல்லாவில் தலா ஒரு கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதுவே, மே 8 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 38 கல்வீச்சு சம்பவங்களாக இருந்தன.
இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறை தலைவர் எஸ்.பி. வைத் கூறுகையில், "ரமலான் மாத ராணுவ நடவடிக்கை நிறுத்தம் இதுவரை வெற்றிகரமாகவே செயல்பாட்டில் உள்ளது' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.