மணமான 6 மாதத்தில் விவாகரத்து: குடும்பத்தாருக்கு அதிர்ச்சி கொடுத்த அரசியல்வாதியின் மகன்

திருமணமாகி 6 மாதத்தில் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் தேஜ் பிரதாப்பால் குடும்பத்தாரும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மணமான 6 மாதத்தில் விவாகரத்து: குடும்பத்தாருக்கு அதிர்ச்சி கொடுத்த அரசியல்வாதியின் மகன்
Updated on
1 min read

திருமணமாகி 6 மாதத்தில் விவகரத்துக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் தேஜ் பிரதாப்பால் குடும்பத்தாரும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத்தின் மகன் தான் தேஜ் பிரதாப் யாதவ்.

விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்திருப்பது குறித்து தேஜ் பிரதாப்பின் வழக்குரைஞர் கூறியிருக்கும் காரணம் என்னவென்றால், "என்னால் அதிக விவரங்களை அளிக்க முடியாது. மனுதாரருக்கும் அவரது மனைவிக்கும் ஒத்துப் போகவில்லை, அதனால் விவாகரத்துக் கோரியிருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார்.

விவாகரத்து மனு தாக்கல் செய்திருப்பது குறித்து தேஜ் பிரதாப்பின் மூத்த சகோதரியும், மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பார்தி கூறுகையில், இது குறித்து எந்த தகவலும் எங்களுக்குத் தெரியாது, உண்மையிலேயே கடும் அதிர்ச்சியில் உள்ளோம் என்று தெரிவித்தார்.

தேஜ் பிரதாப் தற்போது பிகார் எம்எல்ஏவாக இருக்கிறார். முன்னாள் அமைச்சரும் கூட. இவருக்கும் ஐஸ்வர்யா ராய் என்ற பெண்ணுக்கும் கடந்த மே 12ம் தேதி வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்து 6 மாதம் கூட பூர்த்தியாகாத நிலையில் விவாகரத்துக் கோரியிருப்பது அவர்களது குடும்பத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com