
நாக்பூர்: அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார்.
அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது; இனியும் இருக்கும்’ என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்த நிலையில், ராமா் கோயில் எப்போது கட்டப்படும் என ஹிந்துக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்றும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படாவிட்டால், மத்தியில் உள்ள பாஜக அரசு நீடித்து இருக்காது என்றும் சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே கூறினார்.
இந்நிலையில், நாக்பூரில் நடந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசுகையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். அயோத்தியில் ராமர் கோயில் இருந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உச்சநீதின்றத்தில் உள்ளது. நீதிமன்றம் ஆயோத்தி விவகார வழக்குக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்ப்பளிக்க மறுக்கிறது. தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.
ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ராமர் கோயில் விவகாரத்தில் நாம் ஒற்றுமையாக இணைந்து போராட வேண்டும். இந்துக்கள் அமைதியானவர்கள் என்பதால், 30 ஆண்டு காலமாக பொறுமையாக உள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது அவசியமானது. மக்கள் கோபமே அயோத்தியில் பெரும் பிரச்னை ஏற்பட வழி வகுத்தது. எனவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.