சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவை மேலும் 100 சதவீதம் அழித்துவிடுவார்: பிரதமர் மோடி

தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அங்கு பாஜக-வின்பிரசாரப் பொதுக்கூட்டம் நிசாமாபாத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
சந்திரசேகர ராவ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவை மேலும் 100 சதவீதம் அழித்துவிடுவார்: பிரதமர் மோடி
Updated on
1 min read

தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அங்கு பாஜக-வின்பிரசாரப் பொதுக்கூட்டம் நிசாமாபாத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

வளர்ச்சியை விரும்புவோர் பாஜக-வின் மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். ஏனென்றால் பாஜக-வால் தான் புதிய தெலங்கானா மற்றும் புதிய இந்தியாவை உருவாக்க முடியும். இளைஞர்களின் நீண்டகாலப் போராட்டம் மற்றும் தியாகங்களுக்குப் பின்னர் தான் தெலங்கானா தனி மாநிலமாக உருவானது. அதை அழிக்க நினைக்கும் இம்மாநில அரசின் போக்கு ஒருபோதும் நிறைவேறாது.

தற்போது இம்மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் வழியில் செயல்படுகிறார். எதையும் செய்யாமல் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் எனும் காங்கிரஸ் போக்கைத்தான் அவரும் கடைபிடிக்கிறார். ஆனால் தெலங்கானா மாநிலத்தில் எந்தவொரு நலத்திடங்களும், வளர்ச்சியும் ஏற்படுத்தப்படவில்லை. இவை அனைத்தும் இம்மாநில இளைஞர்களுக்கு நன்கு தெரியும் என்பதை நான் அறிவேன்.

நிசாமாபாத்தை லண்டன் போன்று மாற்றுவதாக சந்திரசேகர ராவ் கூறினார். ஆனால் நிசாமாபாத்தின் தற்போதைய நிலையைப் பாருங்கள், இங்கு எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. 

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. ஆனால் தெலங்கானாவில் இருந்து ஒரு குடும்பம் கூட இந்த நலத்திட்டத்தைப் பெறவில்லை. இதற்கெல்லாம் இம்மாநில முதல்வராக உள்ள சந்திரசேகர ராவ் தான் முக்கிய காரணம். 

பிரித்தாளும் முறையை தான் காங்கிரஸ் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கடைபிடிக்கிறது. அவர்கள் இருவரும் ஒரு நாணயத்தின் இருபகுதிகள் ஆவர். சிறுபான்மையினரை நம்ப வைப்பதிலும், வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதையும் மட்டும் இவ்விரு கட்சிகளும் செய்து வருகின்றன. இவர்களுக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று கூடத் தெரியாது.

சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியில் பயிற்சி பெற்ற காரணத்தினால், தெலங்கானாவை எப்படி அழிப்பது என்பதை சரியாக அறிந்து வைத்துள்ளார். எனவே காங்கிரஸ் மற்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேலும் 100 சதவீதம் அழிவை மட்டுமே ஏற்படுத்துவர் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com