பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 65,341 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இவற்றில் 2 ஆயிரம் வாக்குச்சாவடிகள் முற்றிலும் பெண் ஊழியர்களின் கண்காணிப்பின் கீழ் செயல்படவுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மற்றும் வெவ்வேறு பகுதிகளில் 160 வாக்குச்சாவடிகள் மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 45 ஆயிரம் பெண் ஊழியர்கள் உட்பட 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். 12 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
41,30,900 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,389 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 5,04,95,251 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சைகள் உட்பட 2,907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
என் மீது மட்டும் பல்வேறு வழக்குகள்; ஆனால், மமதா மீது இல்லை! ஏன்? பாஜகவுக்கு ராகுல் கேள்வி

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


