இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

உத்தரப்பிரதேச அரசு மீது நம்பிக்கை உள்ளது: ஆப்பிள் நிறுவன ஊழியரின் குடும்பத்தினர்

காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரியின் குடும்பத்தினர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினர்.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 9:21 am

PTI


லக்னௌ: காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரியின் குடும்பத்தினர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவேக் திவாரியின் (38) மனைவி கல்பனா திவாரி, மாநில அரசின் மீது நம்பிக்கை இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போது முதல்வரை சந்தித்தப் பிறகு அந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. மிகத் துயரமான சம்பவம் நடந்த போது அதை தாங்கும் சக்தியே இல்லை. தற்போதுதான் சுய உணர்வே திரும்பியது. எனது கணவர் விட்டுச் சென்ற பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் எனக் கூறினார்.

கடந்த செப்டம்பர் 29ம் தேதி, கோம்தி நகர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் காரை நிறுத்தச் சொன்ன போது நிறுத்தாமல் சென்ற விவேக் திவாரி மீது காவலர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார்.

அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் விவேக் திவாரியின் தாய் பெயரில் தலா ரூ.5 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை, கல்பனா திவாரிக்கு அரசு வேலை உள்ளிட்டவை அளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.